இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 மே, 2011

2G Spectrum - Good article

மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்கத் தெரிந்த மாக்கள் என்றேநினைத்துவிட்டார், தமிழக முதல்வர் கருணாநிதி,
ஏழைகள் பயன்படுத்தும் அளவுக்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது முன்னாள்மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவா? விலை குறைந்தன் காரணம் இதுவே...

கடந்த 1999 ஆண்டில் தான் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்றுவெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின்எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில்நுட்ப வளமான 1G அல்லது 2Gஅலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால், உரிமம்வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை.
விலை கொடுத்து அலைக்கற்றை உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற, நுகர்வோரிடம்நிமிடத்துக்கு அதிக கட்டணம் (In coming and out going ) வசூல் செய்ய வேண்டியகட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், நாம்தான் வசதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்துக்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றையவசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியைபயன்படுத்தினர்.


செல்பேசி நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம்பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரிசெய்ய அன்றைய அரசு ஒரு தொலைத்தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. அதன் விளைவாகவே நாளுக்கு நாள்நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
2010 செல்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008-ல்50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதியஅலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கபட்டுள்ளது.
தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட்அது மட்டும் இல்லை - வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் சேவையை தொடங்கவேண்டும். (இந்தக் குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும்)டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடுஅந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
நியாய கணக்கு...
இந்தியாவில் 60 கோடி பேர் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது.ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCALCALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்துக்கு 40 பைசாகட்டணம். அப்படியென்றால், 15 x 0.40 = 6.0 ரூபாய், ஒரு கைபேசியின் மூலம்செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x 6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்குசெலவாகிறது. ஒரு மாதத்துக்கு 30 x 360 = 10,800 கோடிகள். ஒருவருடத்துக்கு 12x10,800= 1,29,600 கோடிகள். 2008-ல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள்ஆகிறது. அப்படியெனில், குறைந்தபட்ச வருமானம் இன்று வரை ரூ. 2,59,200 கோடிகள்.இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால், இரண்டுவருடத்துக்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவைகட்டணம், இணைப்பு கட்டணம்... இன்னும் என்னென்னவோ கட்டணங்கள் உள்ளது என்றுசொல்கிறார்கள். அத்துடன், 15 நிமிடத்துக்கு அதிகமாக பயன்படுத்துவோரின்செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களேகணக்கிட்டு கொள்ளுங்கள். என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினிகாண்பிப்பது, "INFINITIVE".
இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்றுஅடைந்து இருக்க வேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லைஎன்றுதான் ஒவ்வொருவரும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம்சட்டத்துக்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சிலஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. எப்படி..?
விலைவாசி உயரும். பொருளாதாரம் சீர்குலையும். "Above middle Class" மக்கள்நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் இன்னும்ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம்மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம், குற்றச் சம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்தஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள், இனி மரண தண்டனைகைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.
துரோகம் - 1
உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் ரூ.13,000 கோடிக்கும் அதிகம்
மதிப்புள்ள (உதாரணம் S.TEL <http://s.tel/> நிறுவனம் ரூ.13000 கோடிக்கு வாங்க
முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200, 1300,1650 கோடிகளுக்குதிட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய, மக்களுக்கு சேர வேண்டியவருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
துரோகம் - 2
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளிநாட்டுநிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவதுபல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களைசென்று அடைந்துள்ளது.
துரோகம் - 3
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள்இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட்நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்றுஉள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல்தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க, அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின்உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள்இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவை சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டிஅதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும்
குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL <http://s.tel/>"

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி...‏

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி>> கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம்> 80> ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.>>> *1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம்> வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.> எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.>> இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து> கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா> பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி> அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன்> விளைவு நாடக நடிகனாக ஆனேன்.> இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.>> பக்கம் 81,82 ல்..............> *விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு> கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள்> குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது> செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது> குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம்.> குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய> துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு> சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு> மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த> பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.>> இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................> * பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக> பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும்> பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய்> பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய்> விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி> அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர்> செய்வேன்.>> பக்கம் 92,93 ல்..............................> * பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில்> குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.>> இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.> இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?>> 1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு> 2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்> 3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு> 4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)> 5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்> 6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்> 7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்> 8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்> 9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு> 10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி> 11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்> 12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)> 13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)> 14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)> 15. தயாநிதி மாறன் வீடு> 16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை> 17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு> 18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்> 19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை> 20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்> 21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை> 22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்> 23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32> கிரவுண்ட் நிலம்> 25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி> 26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக> 27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது> 28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை> 29. அந்தமான் தீவின் நிலங்கள்> 30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்> 31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு> 32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை> 33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்> 34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது> 35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு> 36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர்> தோட்டங்கள்> 37. செல்வம் வீடு> 38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்> 39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.> 40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை> நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்> 41. செல்வம் வீடு-பெங்களுர்> 42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்> 43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை> 44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ்> சாலை.> 45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்> 46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.> 47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்> 48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர்> மற்றும் சென்னையில் சொத்துக்கள்.> 49 .additional properties after semmuzi coimbatore farm house> 50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)> extra extra extra extra>>> இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.> திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை> நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள்> பட்டியலில்.>>> வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!

*அ*.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க
.
உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும்
இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்ததிரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின்மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன்முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும்முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில்கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும்வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும்முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில்தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.
எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்ததிரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக்கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத்திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம்முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர்.ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள்விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களைசகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ்கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!
உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை,அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள்கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள்வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கைதூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பதுபிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்கமுனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர்அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.
எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுஇருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்குசமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள்பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபடவிரும்பாததுதான் வேதனைக்கு உரியது.
காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர்இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின்கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவைஉறுப்பினராக பணியாற்றினீர்கள். 1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்றவரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமைபெற்றீர்கள். நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர்சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக்காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில்முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.
யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாகவழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை.வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்துஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்டதமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம்நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது.அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும்சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம்நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும்நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
'அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்தகுரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியைவழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு,ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல்,பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால்,உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள்விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில்ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. தி.மு.க.வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணிபுரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும்சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்புமகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமரமக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில்விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான்பரிதாபத்துக்கு உரியது.
முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்துநீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால்1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப்புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும்தோற்கடிக்கப்பட்டனர். நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம்தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாகமுடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுவிரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்டகனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்குஉங்கள் உறக்கத்தைக் கலைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம்ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’,நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்றுவரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.
ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல்தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாகமுற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வுஅஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா;அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.
'ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம்அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில்இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்துமக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச்செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று,தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள். உங்களோடு கூட்டணிசேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பரமணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்றகுறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றேஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள்நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.
சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல்செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள்முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக்குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். ஆனால்,உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும்திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல்தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டமுதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை.அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்துவிலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எதுகிடைக்கும் என்று யார்தான் அறிவார்? வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில்யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்குமாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால்இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!
ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டிஇடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம்தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்றுகொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில்அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன?உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்துநள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும்திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!
உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர்கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.
உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில்வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படிநடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம். ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களைஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடிமக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகுவளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான்தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல்உங்களுக்கும் உண்டு. 'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள்குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றதுசரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீதுவழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானதுஇல்லையா?
அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம்செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும்,சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம்அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப்பேச வேண்டும்; அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கியகலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில்கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!
திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான்,உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பைஅறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறிஉங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள்.சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப்பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யைநீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம்,சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல்நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை.'தத்துவஞானிகள் ஆளவேண்டும். அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ.அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மைதவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழகமக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர்வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள்இப்போதேனும் உணர்ந்தீர்களா?
போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான்சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை,பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தநற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்தியதுணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழைநீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன்,தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்தியசமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவசசைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம்.உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்குபராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல்நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!
சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டுஇருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது.வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டிநடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். அதற்கான சூழல்இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான்அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும்உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்குசாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த வாய்ப்பை நீங்கள்பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையானஉள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவைசந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழைமக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கநீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். டாஸ்மாக்கைஅரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்கமுடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும். சசிகலாசாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம்அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரைஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம்வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.
'உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசுபிரான். பணிவேநீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!
இப்படிக்கு,
நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்

செவ்வாய், 3 மே, 2011

புதிய பொருளாதாரக் கொள்கையின் சிரழிவுகள்

இந்தியாவின் வறுமைக்கும் நோய்களுக்கும் கல்லாமைக்கும், சமுக - பொருளியல் எற்றத் தாழ்வுகளுக்கும் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியே காரணம் என்று இந்தியத் தேசியவாதிகள் 1947க்கும் முன் கூறி வந்தனர்.
சுதந்திர இந்தியாவில், சோசலிசவாதி என்று சொல்லப்பட்ட நேருவின் ஆட்சியில், ஒரு சனநாயக அரசமைப்பில் அளிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் நமக்குத் தரப்படும் என்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. அடுத்து ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி "மன்னர் மானிய ஒழிப்பு" பெரிய தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்கல்" என்ற திட்டங்களைச் செயல்படுத்தினர். "வறுமையே வெளியேறு" என்று முழங்கினார். நேரு 19 ஆண்டுகளும் இந்திரா காந்தி 17 ஆண்டுகளும் முடிசூடா மன்னர்களாக ஆட்சி செய்தனர். ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம் உண்டாகவில்லை.
நேருவின் பேரன் இராசிவ் காந்தி 1984இல் ஆட்சிப் பொறுப்பேற்றார். தன்னுடைய அம்மாவைவிட பாட்டனை விட வேகமாகப் பேசினார். இந்தியா, அய்ரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக் காலத்தைத் தவறவிட்டு விட்டது. இப்போது தகவல் தொழிழ்நுட்ப யுகம். இதை இந்தியா தவறவிடக் கூடாது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்று கூறி மக்களிடையே புதிய நம்பிக்கையை ஊட்டினார். தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கின்ற புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான வலிமையான அடித்தளம் அமைத்தவர் அவரே!
குப்பை மேட்டிலிருந்த ஒன்று கோபுரக் கலசமானதுபோல் 1991இல் இராசிவ்காந்தி கொலையுண்டதால் நரசிம்மராவ் தலைமை அமைச்சரானார். உலக வங்கியிலும் பன்னாட்டு நிதியத்திலும் பெரும் பதவிகள் வகித்த மன்மோகன் சிங் நிதியமைச்சரானார். இவர்கள் இருவரும் உலகவங்கியும், பன்னாட்டு நிதியமும் அமெரிக்காவும் இடுகின்ற கட்டளைகளைத் தலைமேல் ஏற்று இந்தியாவின் சந்தையை ஏகாதிபத்திய நாடுகளின் பெருந்தொழில் வணிக நிதிக்குழுமங்களுக்கு முழுமையாகத் திறந்துவிட்டனர்.
1989 இல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவலாகவும், உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும் விளங்கிவந்த சோவியத் ஒன்றியம் 1990இல் வீழ்ந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்தது. இந்தப் பின்னணியில் உலக மயத்திற்கு மாற்று இல்லை என்ற பரப்புரை வளர்முக நாடுகளின் மக்களிடையே ஊடகங்களாலும், படித்த- பணக்கார ஆளும் வர்க்க அறிவாளிகளாலும் செய்யப்பட்டது.
அதோபார்! மரத்தின் உச்சியில், கிளையில் தேன் கூடு இருக்கிறது; அதற்கு நேர் கீழகாக நின்று கொள்; தேன் சொட்டும் என்று சொல்வது போல் இருக்கிறது ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள். இப்பிறவியில் வருணாசிரம் உனக்கு விதித்துள்ள கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்று இந்து ஆதிக்க வாதிகள் உழைக்கும் கீழ்ச்சாதி மக்களுக்குச் சொன்னதையே சற்று மாற்றிச் சொல்கிறார் இன்றைய "சனநாயக" அரசியல்வாதிகள்.
இற்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி (2007-2012) 8 விழுக்காட்டை எட்டிவிட்டது. 11 ஆவது அய்ந்தாண்டு திட்டக்காலத்திற்குள் இது 10 விழுக்காடு என்ற நிலையை எய்திவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 7000 என்ற நிலையிலிருந்து 15000 என்று உயர்ந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் உறுதிப் பாடான வளர்முக நிலையில் இருப்பதன் அடையாளம் இது. வெளிநாட்டு மூலதனம் குவிதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணிக் கையிருப்பு தேவைக்கு மேல் உள்ளது. மொத்த விற்பனை விலை உயர்வு என்பது 5 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா அணு ஆயுத வல்லரசாகிவிட்டது. 2020 இல் மாபெரும் வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்பன போன்ற செய்திகள் நாள்தோறும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றால் ஏழை எளிய மக்களாக இருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பயன் கிடைத்துள்ளது என்பதே நம் கேள்வி!
வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி
புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் வளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பதே கண்கூடான உண்மையாக இருக்கிறது. எனவே இது வேலைவாய்ப்பு இல்லா வளர்ச்சி (Jobless Growth) என்று கூறப்படும் குற்றச் சாட்டை உலகமயமாக்கலின் தீவிர ஆதரவாளர்களால் கூட மறுக்க முடியவில்லை. மேலும் இது இருக்கின்ற வேலை வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்காவில் கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது இலக்கத்திற்கு மேற்பட்டவர்கள் தம் வேலையை இழந்துள்ளனர். அதிக மூலதனமும் உயர் தொழில் நுட்பமும் கொண்டதாக உற்பத்தி முறை மாற்றப்படுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. பொருள்களின் உற்பத்தி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு சேவைப்பிரிவு முதன்மை நிலையைப் பெற்றுவிட்டது. இதனால் தொழிலாளர்களும், தொழிற்சங்க இயக்கமும் தன் செல்வாக்கை இழந்து வருகின்றன.
மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரின் விழுக்காடு
1978 2000பிரிட்டன் 39.1 25.5அமெரிக்கா 31.1 22.9சப்பான் 35.1 31.4கொரியா 29.1 28.4சினா 17.5 22.0இந்தியா 13.0 16.0
1950-70 காலத்தில் மின்னணுவியல் தொழில்நுட்பம் முதன்மையானதாக இருந்தது. அதன்பின், தகவல் தொழில்நுட்பமே (Information Technology-IT) உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் மேல் தட்டினராக, பணம் படைத்தோராக உள்ளவர்களின் துய்ப்பிற்காக பொருள்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இரு சக்கர வாகனங்கள், கார்கள், தொலைபேசி, கைபேசி கணிணி, மற்ற ஆடம்பரப்பொருள்கள் முதலானவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகச் சந்தை முதல் நிலையில் உள்ள 200 பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. 200இல் 83 அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள்.
முதலாளிய உற்பத்தி முறையுடன் உருவான தொழிலாளர் வர்க்கம் 1800க்குப்பின் தொடர்ந்து கடுமையாகப்போராடிப் பெற்ற 8மணிநேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, நிலையான வேலை, குறிப்பிட்ட அளவு ஊதியம், ஊதிய உயர்வு, போனசு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, வைப்பு நிதி முதலானவை புதிய பொருளாதாரக் கொள்கையால் பறிக்கப்படுகின்றன. சேவைப்பிரிவுகளில் சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அரியானா மாநிலம் குர்கானில் உள்ள சப்பான் பன்னாட்டு நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் 2005 சூலை மாதம் சங்கம் அமைக்க முயன்ற தொழிலாளர்களை அரியானா காவல்துறை கடுமையாகத் தாக்கியது. தங்கள் சங்கத்தை ஹோண்டா நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்று மட்டுமே தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். 63 தொழிலாளர்களின் மண்டை உடைந்தது. 400 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களின் மனைவியரும் அன்னையரும் காவல் துறையுடன் மோதிடத் துணிந்து நின்றனர். இதைப் பற்றியெல்லாம் மய்ய அரசு வருந்தவில்லை. சப்பான் நாட்டின் மோட்டார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தால் அந்நிய நாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வருவது தடைப்படுமே என்று நாடாளுமன்றத்தில் தன் கவலையைத் தெரிவித்தது. தகவல் தொழில் நுட்பத்துறையில் தொழிற்சங்கம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறுகிறார் மேற்கு வங்க முதுலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா!
100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கவோ, கதவடைப்புச் செய்யவோ, தொழிற்சாலையை மூடவோ அரசின் முன் அனுமதியைப்பெற வேண்டும் என்று தொழிற்தகராறு சட்டத்தில் உள்ள பிரிவை (V(b)) நீக்கிவிட மத்திய அரசு முயன்று வருகிறது. 100 தொழிலாளர்கள் என்ற வரம்பை 1000 தொழிலாளர்கள் என்று உயர்த்த வேண்டும் என்று 2001-02 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தின் முன்வைத்து ஆற்றிய உரையின் போது அன்றைய நிதி அமைச்சர் யசுவன் சின்கா கூறினார். இப்படிச் செய்தால் 90 விழுக்காடு தொழிற்சாலைகள் தொழிற்தகராறுச் சட்டத்திலிருந்து விடுபட்டுவிடும். 300 தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற் சாலைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது 60 விழுக்காடு தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துவிடும். தொழிற்சங்க இயக்கம் அடியோடு முடங்கிவிட்டது. மே நாள் ஊர்வலங்கள் கூட நடத்தப்படுவதில்லை. மக்கள் திரள் போராட்டங்களில் முன்னிலை வகித்த நாட்டின் சனநாயகக் கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய தொழிலாளர் இயக்கம் நலிந்து கிடக்கிறது.
மய்ய அரசும், மாநில அரசும், நீதித்துறையும் தொழிற் சங்க இயக்கங்களை ஒடுக்குகின்றன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது முதலமைச்சராக இருந்த செயலலிதா ஒன்றரை இலக்கம் அரசு ஊழியர்களை ஒரே சமத்தில் பணியிலிருந்து தூக்கி எறிந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலமைச்சரின் சனநாயக உரிமைப் பறிப்புப் போக்கைக் கண்டிப்பதற்குப் பதிலாக வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்களைச் சாடியது.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் இன்று 15 வயது முதல் 59 வயதில் 40கோடி பேர்கள் உள்ளனர். இவர்கள் உழைக்கும் வயதினர் (Work force) எனப்படுகின்றனர். 0-15 வயதில் 20 கோடிக் குழந்தைகளும் சிறுவர்களும் உள்ளனர். இவ்விருபிரிவினரும் சேர்ந்து 60கோடி. எனவேதான் உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன் பேசப்படுகிறது. ஆனால் தற்போது அழைக்கும் வயதினராக இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பும் மற்ற அடிப்படை வாழ்க்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளனவா? இளைஞர் பருவத்தை நெருங்கிக் கொண்டீருப்பவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படவுள்ளதா?
உழைக்கும் வயதினராக உள்ள 40கோடி மக்களுள் மய்ய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்துறையில் அமைப்புசார் தொழிலாளர்களாக உள்ளவர்கள் 3கோடி பேர்கள் உள்ளனர். தனியார் துறைகளில் முறையாக மாத ஊதியம் பெறுகின்ற ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருப்பவர்கள் 3கோடி. இந்த 6 கோடிப் பேர்களும் அவர்களின் குடும்பங்களும் தரமான அடிப்படை வசதிகளைப் பெறும் நிலையில் உள்ளனர்.
சுயதொழில் செய்வோராக 20 கோடிப்பேர்களும் அன்றாடம் கூலி வேலைசெய்து பிழைப்போராக 14 கோடி மக்களும் இருக்கின்றனர். கூலி வேலை செய்வோராக இருப்பவர்களில் 95 விழுக்காட்டினர் பட்டியல் குலத்தினர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினரே ஆவார். சுயதொழில் செய்வோருள் வெரும்பான்மையினர் சிறு விவசாயிகளாகவும், குத்தகைக்குப் பயிரிடுவோராகவும் சிறிய அளவில் தொழில்கள், வணிகம் செய்வோராகவும் உள்ளனர். 40 கோடிப்பேர்களில், 4 கோடிப்பேர்கள் இந்திய அளவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் வேலைக்காக 54 இலக்கம் பேர் பதிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 70 இலக்கம் பேர் வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர்.
வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றதும் 10ஆவது அய்ந்தாண்டு திட்டக் காலத்திற்குள் 5 கோடி வேலைகளைப் புதியதாக உருவாக்கி நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தையே ஒழித்துவிடப் போவதாக அறிவித்தார். வேளாண்மை போன்ற அடிப்படைத் தொழிழ்களில் 92.6 இலக்கம், தொழிற் துறைகளில் 145 இலக்கம், சேவைப்பிரிவுகளில் 252 இலக்கம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று விரிவானதோர் பெரிய நூலை வாஜ்பாய் அரசு வெளியிட்டது. ஆனால் வேலையில்லாதார் எண்ணிக்கைதான் பெருகிவருகிறது.
புதியதாக உருவாகின்ற வேலைவாய்ப்பு என்பது பெரிய மூலதனத்துடன் பன்னாட்டு நிறுவனங்களால், இந்தியப் பெருமுதலாளிகளால் தொடங்கப்படும் சேவைப்பிரிவுகளிலும், தானியங்கிவகைத் தொழிழ்களில் மட்டுமே உருவாகிறது. சில ஆயிரம் இடங்களுக்கான வேலையாக மட்டும் இவை உள்ளன. செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் நோக்கியா, ஹீரோ ஹோண்டா, மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சில நூறு கோடிகள் முதலீட்டில் தொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தம் போடப்படும் காட்சிகள் ஊடகங்களில் பெரிதாகக்காட்டப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் இந்தோனேசியாவின் சலீம் பெருங்குழுமம் ரூ.44,000 கோடிக்கு முதலீடு செய்வதற்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனால் 30,000 பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5கோடி முதலீடு செய்தால் ஒருவருக்கு வேலை என்பது எவ்வளவு கொடிய நிலை! சலீம் குழுமம் என்ன தொழிலில் முதலீடு செய்யப்போகிறது? தொழில்நுட்பப் பூங்கா, அறிவுப்பூங்க, (Knowledge park) பெரிய வணிகவளாகம், உடல்நலப்பூங்கா (Health park) போன்றவைகளைத் தொடங்க மேற்கு வங்க அரசு 5400 ஏக்கர் நிலத்தை அளிக்கிறது. இவற்றால் மேற்கு வங்கத்தில் உள்ள வெகுமக்களுக்கு என்ன பயன்? கொல்கத்தாவில் உள்ள வெகுமக்களுக்கு என்ன பயன்? கொல்கத்தாவில் உள்ள அரசுப் பொது மருத்துவ மனையில் மருத்துவம் செய்து கொள்ளக் கொண்டு வரப்படும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன. பெரிய செய்தியாக இது வெளிவருகிறது. சலீம் குழுமம் தொடங்கும் நட்சத்திர மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் செய்யப்படுமா?
வேளாண்மை
அமெரிக்காவில் 1950இல் 60இலக்கம் வேளாண் பண்ணைகள் இருந்தன. இவற்றைச் சார்ந்து 25 விழுக்காடு மக்கள் இருந்தனர். இப்பண்ணைகள் தமக்குள் இணைந்து 2000இல் 20 இலக்கம் பணைகளாகி விட்டன. 2 விழுக்காடு மக்களே இவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர். அமெரிக்காவில் வேளாண்மை, வணிக வேளாண்மை (Agro-bussiness) யாகிவிட்டது. இந்திய நாட்டிலும் வணிக வேளாண்மையை உருவாக்கிடவே பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு மாநில அரசுகள் அதற்கான செயலில் ஈடுபட்டு வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களை கார்க்கில், கான்டினன்டல் போன்றவை வணிக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளன. உலக தானியச் சந்தையில் 3இல் 2 பங்கு இவ்விரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. பூச்சி மருந்துச் சந்தையில் 84% பத்து பன்னாட்டு நிறுவனங்களிடம் உள்ளது. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு 2 விழுக்காடு மட்டுமே! ஆனால் சேவைப்பிரிவின் பங்கு 72%.
இதேபோல் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு பிரான்சில் 2% செருமனியில் 1%, பிரிட்டனில் 2% இந்நாடுகளில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்வோர் எண்ணிக்கை முறையே 6%, 3%, 3% (உலக வங்கி அறிக்கை 2000) ஆகும். ஆனால் அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் ஓராண்டில் 360 மில்லியன் டாலர் (ரூ. 15,20,000 கோடி) வேளாண் மானியம் தரப்படுகிறது. தொழில் வளர்ச்சி பெற்ற இந்நாடுகளின் வேளாண்மையின் உயர் விளைச்சல் அதிக அளவில் இடுபொருள்கள் சார்ந்ததாகவும், முழுவரும் இயந்திரமயமானதாகவும் ஆகிவிட்டது. இடுபொருள்களான விதை, உரங்கள், பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, இயந்திரங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே பெரும்பகுதி வேளாண் மானியம் போய்ச் சேருகிறது.
இந்தியாவிலும் முதலாளிய உற்பத்தியில் தயாரிக்கப்படும் இடுபொருள்கள் சார்ந்ததாக வேளாண்மை ஆக்கப்பட்டுவிட்டது. 1960களின் இறுதியில் தொடங்கப்பட்ட பசுமைப்பருட்சி மூலம் மேலைநாட்டு வேளாண்மை முறைகள் இங்கே புகுத்தப்பட்டன. இதனால் புன்செய் வேளாண்மை சிர்குலைந்துவிட்டது. அந்தந்த பகுதிகளுக்குரிய, சூழலுக்கு ஏற்ற, விதைகள் அழிந்து விட்டன. இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் நஞ்சால் நிலமும், நீரும் சுற்றுச் சூழலும் பாழ்பட்டுவிட்டன. இயந்திர மய வேளாண்மை வேளாண் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்தது. விளைச்சலில் பெரும் தேக்கம் ஏற்பட்டுவிட்டது. 1998 முதல் 2003 காலத்தில் 1,10,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று நடுவண் அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் 2006 சூலை மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 1995க்குப்பிறகு மய்ய அரசும், மாநில அரசுகளும் வேளாண்மையை அடியோடு புறக்கணித்தன. வேளாண் சந்தையில் அறுவடைக் காலங்களில் தனியார் நிறுவனங்கள் குறைந்த விலையில் விளை பொருள்களை கொள்முதல் செய்து பிறகு அதிக விலைக்கு விற்பது என்பது தங்கு தடையின்றி நடக்கிறது. அதனால் கோதுமை, பயறுவகைகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் வேளாண்மையை நம்பியே வாழ்கின்றனர். புதிய பொருளாதாரக் கொள்கை இவர்களை வேளாண் சார்ந்த தொழில்களிலிருந்து விரட்டிக் கொண்டிருக்கிறது.
கல்வி
"நாட்டின் மொத்த உழைப்பாளர்களில் 67 விழுக்காட்டினர் எழுத்தறிவற்றவர்களாக இருக்கின்றனர். அல்லது ஓரளவு மட்டுமே எழுத்தறிவு பெற்றுள்ளனர்" என்று பிரதமர் மன்மோகன்சிங் 6.10.2004 அன்று தில்லியில் சிறந்த தொழிலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பேசினார். இந்தியாவில் ஆண்டுதோறும் சில இலக்கம் பொறியியல் பட்டதாரிகள் கல்லூரிகளிலிருந்து வெளியே வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டம் 60,000 பொறியியல் பட்டதாரிகள் இப்போது வெளி வருகின்றனர். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் ஒரு இலக்கம் இடங்கள் உள்ளன. பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்களே தவிர, எங்கள் தேவைகேற்ற திறன் கொண்டவர்களாக அவர்கள் இல்லை; எனவே எங்கள் நிறுவனங்களின் வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று பன்னாட்டு நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர்கள் கூறுகின்றனர். நகர்ப்புறங்களில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், பணக்காரர்கள், முதலாளிகள், பெரிய வணிகர்களின் குடும்பங்களிலிருந்து தரமான ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சில ஆயிரம் பேர்கள்தாம் ஆண்டுதோறும் பெரிய தொழில் நிறுவனங்களில் வேலையில் சேருகின்றனர். மாதந்தோறும் இருபதாயிரம் முதல் அய்ம்பது ஆயிரம் சம்பளம் தரப்படும் சில ஆயிரம் வேலை இடங்களுக்காக இற்தியா முழுவதும் தாய்மொழி வழிக்கல்வி புறக்கணித்தவிட்டு கோடிக்கணக்கான குடும்பங்கள் தம்மிடம் உள்ள சிறு உடைமையை இழந்து, கடன்பட்டு, தம் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். ஏகாதிபத்திய தீப்பந்தத்தில் விட்டில் பூச்சிகளாய் இந்த இளைஞர்களின் எதிர்காலம் பொசுங்கிக் கொண்டிருக்கிறது.
மறுபுறத்திலோ உழைக்கும் மக்களுக்கு தொடக்கக் கல்வியும் கிடைக்காத நிலை நீடிக்கிறது. 1960 க்குள் 14வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவயக் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. 2001இல் கல்விபெறும் உரிமை அடிப்படை உரிமையில் சேர்க்கப்பட்டது. முதல் வகுப்பில் சேரும் நூறு மாணவர்களில் 35பேர்கள் அய்ந்தாம் வகுப்பை முடிக்கு முன்னரே பள்ளியை விட்டு நின்று விடுகின்றனர். 54 விழுக்காட்டினர் 8ஆம் வகுப்பிற்குள் நின்று விடுகின்றனர். பள்ளிகளில் இடை நிற்கும் (dropouts) மாணவர்கள், பட்டியல்குல, பழங்குடி, சூத்திர உழைப்புச்சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது மனங்கொள்ளப்பட வேண்டும்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் படி மக்களுக்கும் கல்வி தரும் பொறுப்பிலிருந்து அரசு விலகி விடுகிறது. எனவே தனியார் மழலையர் பள்ளிகள் முதல் சுயநிதிக் கல்லூரிகள் வரை கல்வியின் பெயரால் உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், பட்டதாரி ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் என்ற பெயர்களில் தமிழ் நாட்டில் உழைக்கும் மக்களின் குடும்பங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் கொள்ளையில் பங்கு தரப்படகிறது. கல்விச் செலவு ஏழை எளிய மக்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சுமையாக உள்ளது.
மருத்துவம்
அறிவுசார் சொத்துரிமை என்ற (TRIPS) பெயரில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பகற் கொள்ளையடிக்க இந்தியச் சந்தை திறந்து விடப்பட்டுள்ளது. 1979இல் மருந்து விலைக்கட்டப்பாட்டு ஆணையத்தின் (DPCO) கீழ் 354 மருந்துகள் இருந்தன. பெரும்பாலான மருந்துகள் அதன் உற்பத்திச் செலவை விடப்பத்து மடங்கு முதல் நூறு மடங்கு வரையில் அதிய விலையில் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்நிலையில் நடுவண் அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் மருந்துகளின் விலையைக் குறைக்கப் போவதாக அறிவித்திருப்பதைப் போன்ற மோசடி வேறெதுவும் இல்லை!
உலகில் எந்த நாட்டிற்கும் இணையான உயர் மருத்துவ வசதிகள் சென்னை, மும்பை, தில்லி போன்ற பெரு நகரங்களில் கிடைக்கின்றன என்று பெருமையுடன் பேசப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி போன் றநகரங்களில் கூட இதயநோய் அறுவைக்கு ஒன்றரை இலட்சம் பணம் வாங்கப் படுகிறது. பெரிய செலவு பிடிக்கும் நோய் வந்தால் மருத்துவச் செலவினால் அந்த குடும்பமே அழியக் கூடிய நிலை ஏற்படுகிறது. சாதாரண நோய்களுக்குக் கூட அதிகப் பணம் பிடுங்கும் கழுகுகளாக மருத்துவர்கள் உள்ளனர். தொழில் வளர்ச்சி பெற்ற அய்ரோப்பிய நாடுகளில் மக்களின் மருத்துவச் செலவில் பெரும்பகுதியை அரசே ஏற்றுக் கொள்கிறது. பிறந்தது முதல் பள்ளிப் பருவம் வரையில் குழந்தைகளின் மருத்துவச் செலவு முழுவதையும் முதலாளிய அரசுகளே ஏற்றுக் கொள்கின்றன.
இந்தியாவில் கிராமங்களில் 65 விழுக்காடு வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. தமிழ்நாட்டில் 25 விழுக்காடு வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. இந்தியக் கிராமங்கள் இருண்டு கிடக்கின்றன.
மக்களின் அடிப்படைத் தேவைக்கான கல்வி, மருத்துவம், மின்சாரம், தூய்மையான சுற்றுப்புறம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், குறைந்த கட்டணத்திலான போக்குவரத்து, நல்லசாலைகள் ஆகியவற்றை அளிக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும். மய்ய அரசும் மாநில அரசுகளும் இக்கடமையை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை. ஆனால் இந்திய முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றன. சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன.
புதிய பொருளாராரக் கொள்கை உழைக்கும் வெகுமக்களின் வாழ்வாதாரங்களை மேலும் பறிப்பதற்காகவே இருக்கிறது. மக்களுக்கானதாக அரசை மாற்றாத வரையில் விடிவோ, விடுதலையோ கிடைக்காது.
இலத்தின் அமெரிக்க நாடுகள் 21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசப் பாதையைக் காட்டிக் கொண்டிருக்கின்றன

உணவுப் பற்றாக்குறையின் உண்மையான கதை

உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நவீன அறிவியல் நமக்களித்த ஒரு தொழில்நுட்பத் தீர்வுதான் (technological solution) பசுமைப் புரட்சி. அப்படியென்றால், உணவுப் பிரச்சினை பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை என்ற முடிவில்தான் இப்படி ஒரு தீர்வை முன்வைத்திருக்க வேண்டும். அந்தத் "தீர்வின்" பலன்களை அலசி ஆராய்ந்து பார்ப்பது அடுத்த கட்டம். முதலில், இந்த முடிவின் அடிப்படை அனுமானங்களைக் கேள்விக்குட்படுத்தப்போகிறோம்.
இதுவரையில் நாம் ஆழமாகப் பார்த்ததுபோல, இந்திய மண் வளமிழந்தது உண்மைதான். போதிய (எருவாகிய) சாணம் கிடைக்காமல், மண்ணுக்குச் சேர வேண்டிய பிண்ணாக்குகள் ஏற்றுமதியாகி, கால்நடைகளுக்குப் போதிய உணவில்லாமல், பயிர் சுழற்சி கைவிடப்பட்டு, கால்நடைகள் லட்சலட்சமாய் மாண்டுபோய், மேல்மண் அரித்துக்கொண்டு, கரைச்சுவர்களினால் நிலங்கள் உப்பாகி, கால்வாய்களும் கிணறுகளும் பழுதடைந்து... இப்படி நாம் பார்த்த பல காரணங்களினால் நம் நிலங்கள் வளமிழந்து நின்றன. இதனால் உணவு உற்பத்தியும் சரிந்தது. நாம் பார்த்ததுபோல, இந்தக் காரணங்களின் பின்னணியில் பல அரசியல் - பொருளாதாரக் காரணிகள் இருந்தாலும், இவை பெருமளவில் உற்பத்திக் குறைவு என்கிற தொழில்நுட்ப ரீதியான பிரச்சினையில் அடங்கும் என்று வாதத்திற்காகச் சொல்லிக்கொள்ளலாம். இந்தக் கட்டுரையில், சுதந்திரத்திற்கு முன்பாக நம் நாட்டில் பரவலாக இருந்த உணவுப் பற்றாக்குறையைச் சற்றே ஆராயப்போகிறோம்.
இக்கட்டுரைக்கான தகவல்கள் அனைத்தும், காந்தியடிகள் நடத்திய "ஹரிஜன்" பத்திரிகையில் 1935-யிலிருந்து 1947 வரையில் (இடையில் பத்திரிகை தடைசெய்யப்பட்ட 1942-45யை விட்டுவிட்டு) வெளியாகிய பல கட்டுரைகளிலிருந்து சேகரிக்கப்பட்டவை. உணவுப் பற்றாக்குறைப் பிரச்சினை நாடெங்கும் பரவிய காரணத்தால், அந்த நாட்களில் இது ஒரு முக்கியமான தேசியப் பிரச்சினையாகக் கருதப்பட்டது. இதை ஆராய்ந்து, இதற்கான பல தீர்வுகளை முன்வைத்து மருத்துவர்கள், விஞ்ஞானிகள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான கடிதங்களை காந்திக்கு அனுப்பினர். இவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்து, கவனமாகத் தேர்ந்தெடுத்து பத்திரிகையில் பிரசுரித்துவந்தார் காந்தி. பிரசுரமான கட்டுரைகள் "Food Shortage and Agriculture" என்ற புத்தகமாக 1949-இல் வெளியானது. இப்புத்தகத்தை http://www.new.dli.ernet.in என்கிற வலைதளத்தில் காணலாம். இந்தப் புத்தகத்தில், அரசாங்கம், நுகர்வோர், விவசாயிகள், வியாபாரிகள் ஆகிய அனைத்துத் தரப்பினர்களுக்குமான உணவு இருப்பை அதிகரிப்பதற்கான யோசனைகளைப் பற்றி காந்தியடிகள் பல பக்கங்களுக்கு எழுதியுள்ளார்.
வங்காளப் பெரும்பஞ்சம்
இப்போதைய நம் கதை, கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போரின் சமயத்திலிருந்து தொடங்குகிறது. போர்க்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அதிக உணவை உற்பத்திசெய்வோம் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவில் உற்பத்தி பெருகவில்லை.
உலகப் போரில் மத்திய கிழக்கில் இருந்த இந்திய - ஆங்கிலேய இராணுவத்திற்காக உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1942-இல் ஜப்பானியர்கள் ஆங்கிலேயரை வென்று, சிங்கப்பூரையும் பர்மாவையும் கைப்பற்றினர். இதனால் பர்மாவிலிருந்து இந்தியாவுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த அரிசி நின்றுபோனது. இது நம் நாட்டுத் தேவையில் 5%. பின்னர், ஜப்பானியர்கள் பர்மாவிலிருந்து வங்காளத்துக்குள் நுழைந்து இந்தியாவையும் கைப்பற்றிவிடுவார்களோ என்ற பயத்தில், வங்காளத்தில் இருந்த ஆங்கிலேய இராணுவத்தினருக்கான உணவு அவசர அவசரமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. இதெல்லாம் போதாதென்று, அக்டோபர் மாதம் 1942-இல் ஒரு மாபெரும் புயல் வங்காளத்தைத் தாக்கி இளம் பயிர்களை அழித்தது. இவை தவிர, எப்போதும்போல இந்திய தானியங்களை ஆங்கிலேயர் ஏற்றுமதி செய்வதும் தொடர்ந்தது.
பல காரணங்களினால், வங்காளத்தில் கிடைத்துக் கொண்டிருந்த உணவு இருப்பு குறையத்தொடங்கிய சமயத்தில் அரசு ஒரு காரியத்தைச் செய்தது. உண்பதற்குத் தேவையான உணவுக் கிடங்குகளில் போதிய அளவு இருந்தும், அரசாங்கம் "உணவுப் பஞ்சம்" பற்றிய ஒருவித பயத்தைப் பரப்பியது. விலைக் கட்டுபாட்டுக் கொள்கையைப் பின்பற்றி, உணவுப் பொருட்களுக்கு அரசாங்கமே ஒரு குறைந்த விலையை நிர்ணயம் செய்து உணவு விநியோகத்தையும் கட்டுப்படுத்தியது. இதனால், வியாபாரிகள் தங்கள் கையிருப்பைப் பதுக்கிவைத்துக்கொள்ளத் தொடங்கினர். இதனால், உணவு போதிய அளவில் சந்தைக்கு வராமல் செயற்கையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. பதுக்கிவைக்கப்பட்ட உணவுகளின் அளவுகள் எவ்வளவு என்று வெளிப்படையாகத் தெரியாததால், ஏற்கனவே ஏற்பட்ட செயற்கைப் பற்றாக்குறை தீவிரமடைந்து, அதனால் பயம் அதிகரித்து, விவசாயிகளும் வியாபாரிகளும் மேலும் பதுக்கினார்கள். அதே சமயம், ஒரு மாபெரும் கருப்புச் சந்தை உருவாகியது. பணக்காரர்கள் அதிக விலை கொடுத்து உணவை வாங்கினார்கள். இது முடிவற்ற ஒரு சுழற்சியாக மாறி, கட்டுப்பாடும் பற்றாக்குறையும் பயமும் கள்ளச் சந்தையும் ஒன்றையொன்று வளர்த்தன. இதையடுத்து, அரசாங்கத்தில் ஊழல் அதிகரித்து, அரசாங்க அதிகாரிகள் பணம் பண்ணத் தொடங்கினார்கள். இப்படிப்பட்ட இலாபகரமான ஏற்பாட்டை மாற்றியமைக்க, அதிகாரமுள்ளவர்களுக்கு எந்த ஆர்வமோ நிர்ப்பந்தமோ ஏற்படவில்லை. இப்படியாக, புழக்கத்தில் இருந்த உணவு, கையிருப்பில் இருந்த உணவு, ஏழை மக்களுக்குக் கிடைக்காமல் போயிற்று.
ஆகஸ்டு 1943-இல் இந்திய அரசாங்க உணவுத் துறை, "வங்காளத்திலிருந்து உணவு ஏற்றுமதி அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது" என்று அறிவித்தது. ஆனால், கல்கத்தா சுங்கத் துறை (Calcutta Customs House) வெளியிட்ட ஏற்றுமதிப் பட்டியலின்படி, ஆகஸ்டு-செப்டம்பர் ஆகிய மாதங்களில் மட்டும், ஒரே ஒரு அந்நிய நிறுவனம் மட்டுமே, 22,504 டன் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாகப் பின்னர் தெரியவந்தது!
இப்படி வங்காள மக்கள் அனைவருக்கும் ஓராண்டிற்குப் போதுமான உணவு இருந்தும், ஏழை மக்களுக்கு மட்டும் அது போய்ச் சேரவில்லை. நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், வங்காளப் பெரும்பஞ்சத்தைப் பற்றி அவருடைய "Poverty and Famines" (பஞ்சங்களும் வறுமையும்) என்னும் புத்தகத்தில் எழுதுகையில், பஞ்சத்தில் மாண்ட 30 லட்சம் மக்களில் அனைவருமே கூலியாட்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், பஞ்சம் ஏற்படாத, போர் நிகழ்ந்துகொண்டிருந்த ஆண்டான 1941-ஐவிட 1943-இல் உணவு உற்பத்தி அதிகமாகவே இருந்தது என்றும், அதனால் உணவுப் பற்றாக் குறை என்பது உற்பத்தி பற்றிய பிரச்சினை இல்லை என்றும், அது முக்கியமாக அரசியல் பொருளாதாரப் பிரச்சினை என்றும் நிரூபித்தார்.
1946-இல்கூட, டாக்காவில் ஒரு மாண்டு (37.32 கிலோ) அரிசியின் விலை ரூ. 50ஆக அதிகரித்ததாம். ஆனால், மற்ற மாகாணங்களில் ரூ.20க்கு விற்பனையாகியதாம். சாதாரணமாக, அதற்கு முன்னதாக இருந்த அரிசியின் விலை ரூ. 4!
நாடு முழுவதும் உணவுப் பற்றாக்குறை
இவற்றையெல்லாம் தொடர்ந்து வங்காளத்தில் மட்டுமல்லாமல், நாடெங்கிலும் உணவுப் பற்றாக்குறை பரவத்தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணமாக அரசாங்கத்தின் விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையைத் தான் சுட்டிக்காட்டுகிறார் காந்தி. இது, இருக்கும் உணவைப் பெரும்பான்மையான ஏழை மக்களுக்குப் போய்ச்சேராமல் செய்து, கிடங்குகளில் தங்கிச் சீரழியக் காரணமானது. இந்தக் கொள்கையை நிறுத்துமாறு காந்தி அடிக்கடி "ஹரிஜன்" பத்திரிகையின் மூலம் அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார்.
1946-இல், மும்பையில் இருந்த ஒரு இந்தியக் கப்பல் கம்பெனியின் நிர்வாகி மூலம் கீழ்க்கண்ட தகவல் தெரியவந்தது. "ஜப்பானுக்குத் தொலைத்த இரண்டு கப்பல்களுக்குப் பிறகு, போன மாதம்தான் ஒரு புதிய கப்பல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. சென்ற வாரம்தான் (14.2.1946) ஒரு அந்நிய நாட்டுக்கு அவளது (கப்பலின்) முதல் பிரயாணம் நடைபெற்றது. அதில் 2,951 மூட்டை பாசிப் பருப்பைக் கொண்டுசென்றாள். சென்ற மாதம், "பேகம்" மற்றும் "ஜலஜ்யோதி" ஆகிய நீராவிக் கப்பல்கள் (Steamers) 35,000 மூட்டை பருப்பு வகைகளைக் கொழும்புக்குக் கொண்டுசென்றன் 3,011 மூட்டை துவரம் பருப்பு, 1,612 மூட்டை பாசிப் பருப்பு, 26,053 மூட்டை ஏனைய உணவுப் பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. அதிகாரிகளுக்குத் தெரிந்தவரையில், இதே அளவுகளில் ஒவ்வொரு மாதமும் பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன. உணவுப் பற்றாக்குறை தலை விரித்து ஆடும் சமயத்தில்கூட, உணவு ஏற்றுமதி என்னவோ நாட்டின் பல துறைமுகங்களிலிருந்து நடந்து கொண்டுதான் இருந்தது என்பதை இது போன்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அரிசித் தொழிற்சாலைகளில் நேர்ந்த இழப்புகள்
தினஜ்பூரிலிருந்து, வடக்கு வங்காள அரிசித் தொழிற்சாலை சங்கத் தலைவரின் அறிக்கை கீழ்க்கண்ட பல முக்கியமான தகவல்களை அளிக்கிறது.
"1944 வரை உடைந்த அரிசிகளை (குறுணைகளை) எல்லாம் சேர்த்துத்தான் மக்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். 1945-இல், அரிசித் தொழிற்சாலைகள் இந்தக் குறுணைகளை நீக்கி முழு அரிசியை மட்டுமே விநியோகம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டன... இந்தக் குறுணை மூட்டைகள் ஏராளமாகத் தேங்கத்தொடங்கிவிட்டன. எத்தனையோ முறை முறையிட்டும், நினைவுபடுத்தியும், இவற்றை உபயோகப்படுத்த எந்த ஏற்பாடும் மேற்கொள்ளாமல் உள்ளது."
"பல சமயங்களில், "தரம் குறைவு" என்ற காரணம் காட்டி, அரசாங்கம் தொழிற்சாலைகளிலிருந்து அரிசியை வாங்கவும் வாங்காது, எங்களை ஏற்றுமதி செய்யவும் விடாது. இதனால், உணவு வீணாகிப்போகும் அல்லது, மாட்டுத் தீவனத்துக்குச் செல்லும். அரசாங்கம் விற்கும் மிக மோசமான அரிசியைவிட எங்கள் அரிசி எவ்வளவோ தரமானது. உள்நாட்டிலேயே விற்க அனுமதியளித்தால்கூட, இத்தகைய உணவுப் பற்றாக்குறைக் காலங்களில் மக்களுக்காவது போய்ச்சேரும்!"
"100% மெருகேற்றிய அரிசியை மட்டுமே விநியோகம் செய்யுமாறு அரசாங்கம் எங்களைக் கட்டாயப்படுத்துகின்றது. சிறிது பழுப்பாகவோ இளஞ் சிவப்பாகவோ இருந்துவிட்டால்கூடக் கடுமையாக வரி விதிக்கப்படுகின்றது. மெருகேற்றும்போது, அரிசி நிறைய உடைந்தும் வீணாகிறது! இத்தகைய இழப்பு ஒரு பெரும் குற்றமாகும்."
"அதனால், உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைத்து இந்தப் பிரச்சினைகளைக் கவனிக்கவில்லையென்றால், 1943-இல் வங்காளத்தில் ஏற்பட்ட சோகம் நாடு முழுவதற்கும் பரவிவிடும்."
ஆங்கிலேயரின் நவீன அரிசி ஆலைகள் (rice mills) வந்த காலத்திற்கு முன்புவரையில், நாம் உண்ட அரிசி நெல்லை உரலில் குத்தி நமக்குக் கிடைத்த, முக்கியமான ஊட்டச்சத்துகள் அடங்கிய தவிட்டுடன் கூடிய ஒருவித பழுப்பு நிற அரிசியே. அதற்குப் பிறகுதான், அரிசியிலிருந்து தவிட்டை நீக்கி, மெருகேற்றி, வெள்ளை வெளேரென்று கிடைக்கத் தொடங்கியது. வெகு விரைவிலேயே இதை மக்கள் நன்றாக ருசியும் பார்த்துவிட்டனர். காந்தியடிகள் இதைப் பற்றி எழுதுகையில், "பர்மாவிலிருந்து இறக்குமதியாகிக் கொண்டிருந்த (இப்போது நிறுத்தப்பட்டுள்ள) அரிசி இறக்குமதி என்னவோ நமது தேவையில் 5%தான் (1938-39ல் இந்தியாவின் அரிசி உற்பத்தி 240 லட்சம் டன் பர்மாவிலிருந்து இறக்குமதியானது 14 லட்சம் டன்). ஆனால், இப்படி அரிசியை மெருகேற்றும்போது ஏற்படும் இழப்பு 10% ஆகும். அதாவது 28 லட்சம் டன்" என்று எழுதினார். அரசாங்கம் சமீபத்தில் விநியோகிக்கத் தொடங்கிய பழுப்பு அரிசியை வாங்கி உண்ணுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், விரைவில் மும்பையில் ஒருவித இரும்பு உரல்-உலக்கை வேகமாக விற்பனையாகத் தொடங்கியது. வாங்கிய அரிசியை வீடுகளிலேயே அரைத்து மெருகேற்றுவதற்காக உபயோகப்பட்ட இந்த உரல்-உலக்கை, 30% வரை இழப்பை ஏற்படுத்தியது என்று காந்தியடிகள் வருத்தத்துடன் எழுதினார். இது அரசாங்கத்திடம் கிடைக்கும் மெருகேற்றிய அரிசியைவிட மோசமானதாகும் என்றார்.
போக்குவரத்து மற்றும் கிடங்குகளில் ஏற்பட்ட இழப்புகள்
நிலங்களில் அறுவடைசெய்யப்பட்ட உணவு தானியங்கள், தொழிற்சாலைகளுக்கும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்களில் இருந்த விநியோக மையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இப்படி எடுத்துச் செல்லும்போது கிழிந்த கோணிகளினால் ஏற்பட்ட இழப்புகள், மழை, மற்றும் எலிகள், பறவைகளால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளமாக இருந்தன.
"சென்ற 12 மாதங்களில் மட்டுமே, 30 லட்சம் மாண்டு கோதுமை, அரசாங்கக் கிடங்குகளில் சேதமாகியுள்ளது." என்று வங்காள உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது.
காந்திக்குக் கடிதம் எழுதிய ஒருவர், தான் நேரில் கண்ட ஒரு சம்பவத்தை எழுதிருந்தார். ஒரு முறை லஹோருக்கும் லயல்பூருக்கும் இடையே உள்ள இரயில் தண்டவாளங்களுக்கு இடையே மற்றும் சில திறந்த லாரிகளில் இருந்து மழையில் நனைந்த கோதுமை மூட்டைகள் மட்டும் 1,500 டன் ஆகும். "பெரிய அளவுகளில் பாழாகிப்போன கோதுமை மாவைக் கடந்த சில நாட்களாக நாராயன்கஞ்சில் உள்ள "தலாக்" நதியில் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்." என்றது ஒரு வங்காள செய்தித்தாள். " "மனிதர்களுக்கு ஏற்றதல்லாத உணவு" என்று அறிவிக்கப்பட்ட, கிடங்குகளில் தேங்கிக்கொண்டிருக்கும் உணவுப் பொருட்கள் ஏராளமாக வெளியே கொண்டு கொட்டுகிறார்களாம். இதைப் பற்றிய கடிதங்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன." என்றார் காந்தி.
ஒரு மருத்துவர் எழுதிய கடிதத்தில், கிடங்குகளில் தேங்கிக்கிடக்கும் உணவு பாழாகிப்போய், அதை உண்ணும் மக்களுக்கு வியாதிகள் அதிமாகியுள்ளன என்று கூறியுள்ளார்.
பணப் பயிர்களுக்காக விட்டுக்கொடுக்கப்பட்ட நிலங்கள்
உணவுப் பற்றாக்குறை மோசமாக இருந்த நிலையில்கூட, ஆங்கிலேயருக்கு இலாபம் ஈட்டித்தந்த பணப்பயிர் வளர்ப்பு சற்றும் தடைபடாமல் வளர்ந்துகொண்டு வந்தது. "லட்சக்கணக்கான ஏக்கர் வளமான மண் - குண்டூரில் 4 லட்சம், கிருஷ்ணா கோதாவரி மாகாணங்களில் 6 லட்சம், சர்கார்களில் 10 லட்சம், மற்றும் இதர பகுதிகளில் 20 லட்சம்-வர்ஜினியா புகையிலை வளர்க்கப் பயன்பட்டுவருகிறது." என்று காந்தி கணக்கிட்டுக் காட்டினார். புகையிலைக்கு வரி விதிக்காத சில மாநிலங்களில் மட்டும் இலவசமாக நிலங்கள் வழங்கி, விதைகளை விநியோகம் செய்து, வேறு மாநிலங்களிலிருந்து புகையிலை விவசாயிகளை வரவழைத்து சம்பளம் கொடுத்தது அரசாங்கம். இப்படிக் கிட்டத்தட்ட 3,000 குடும்பங்கள் குஜராத்திலிருந்து பக்கத்து மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன.
இது தவிர, அரிசி, சோளம், கோதுமை, உருளைக் கிழங்கு, ஜவ்வரிசி, பார்லி ஆகியவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு, குறைந்தது 13 தொழிற்சாலைகள் starch, dextrine ஆகியவற்றைத் தயாரித்ததாகவும், அது தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.
தீர்வுகள்
அந்தச் சமயத்தில், பிற நாடுகளிலிருந்து உணவு இறக்குமதி செய்யும் சாத்தியக்கூறைப் பற்றி அரசாங்கம் பேசத் தொடங்கியது. இதை முற்றிலும் நிராகரித்தார் காந்தி. "இந்திய மண்ணில் நம் நாட்டுக்குத் தேவையான உணவு தானியங்களை விளைவிக்க முடியாது என்ற வாதத்தை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். நமக்கு இப்போது தேவையானது எல்லாம் தன்னம்பிக்கை, நல்ல யோசனைகள் மற்றும் கடும் உழைப்பு."
இதுவரை நாம் பார்த்த இத்தனை பலவிதமான இழப்புகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைச் சரிப்படுத்தத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும் என்பது தவிர, உணவைப் பெருக்குவதற்கான பல வழிகளைப் பற்றி காந்தி எழுதியுள்ளார். எளிதாக மற்றும் விரைவில் விளையக்கூடிய கிழங்கு வகைகளை அதிகம் பயிரிடலாம். தவிட்டுடன் சேர்ந்த அரிசி மற்றும் கோதுமையால் செய்த உணவுகளை உட்கொள்ளலாம். ஆல்பர்ட் ஹோவார்டின் "இந்தோர் முறை"யில் எரு தயாரித்து நிலங்களுக்கு இடலாம். எல்லா இடங்களிலும் விளைந்திருக்கும் காட்டுக் கீரைகளை அடையாளம் கண்டு, அவற்றை உபயோகப்படுத்தும் முறைகளைத் தெரிந்துகொண்டு எளிதில் ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். எல்லா வீடுகளில் கிடைக்கும் தொட்டிகளில் எல்லாம் சிறிது மண்ணை நிரப்பிக் காய்கறி பயிரிடலாம். இப்படிப் பல யோசனைகளைப் பற்றி விரிவாக எழுதிய வண்ணம் இருந்தார். இது தவிர, நிலச் சொந்தக்காரர்கள் எல்லாம் தங்கள் நிலங்களை தரிசாகப் போட்டிருக்காமல், ஏதாவது உணவுப் பொருட்களை விளைவிக்குமாறு கேட்டுக்கொண்டார். 1946-இல், 22% (471.5 லட்சம் ஏக்கர்) விவசாய நிலம் ஒன்றும் விளையாமல் தரிசாகக் கிடந்ததாம்.
"நாட்டில் ஏற்படும் பஞ்சங்களுக்கு மக்கள்தொகை வளர்ச்சியைக் காரணம் காட்டுவது சமீபத்தில் ஒரு வழக்கமாகிவருகிறது" என்று கூறிவிட்டு, நிலங்கள் சேதமடையாத விதத்தில் பயிரிட்டு, அறுவடைசெய்த உணவைப் பாதுகாத்து, எல்லாருக்கும் கிடைக்கும்படி செய்தால், நம் மக்கள்தொகை அதிகமானாலும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட எத்தனையோ ஆண்டு காலமாகும் என்பதற்கான காரணங்களையெல்லாம் பட்டியலிட்டிருக்கிறார். மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும் அரசியல் அதிகாரத்தின் தன்மையையும் வைத்துப் பார்க்கும்போது, மக்கள்தொகைப் பெருக்கம் என்பது அரசு, தனது பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதற்காகச் சொல்லும் வசதியான காரணமாகத்தான் தெரிகிறது!

செவ்வாய், 8 ஜூன், 2010


விடுமுறை பெற்று
விழாமுடித்து, விடைபெற வரவில்லை.
விழி நிறைத்து வாழ்த்து சொல்லி
வழியனுப்ப வரவில்லை.
விலா எலும்பாய் விளங்கி நின்று
விழு முன்னே தோள் கொடுக்கும் தோழர்களாய்
சரித்திரப் பக்கங்களில் உயிர்மெய்
எழுத்துக்களால் உயிர்த்து வரும்
சாதனைதனை வெற்றிச் சிகரம் எடுத்துப்
புறப்படும் நண்பர்களுக்கு
எங்கள் சந்தோஷத்தில்
சரிபாதிக்கு மேலும்,
அனுபவத்தில் அடைந்ததனைத்தும்,
அச்சுப் பிறழாமல் கொடுத்து,
அன்பும், அறமும் ஊற்றாய் ஊடே வைத்து,
பண்பும், பயனும் குறையாமல் விளைய,
இல்வாழ்வில் இன்பங்கள் எல்லாம்
இடையறாது செழிக்க
இதயத்திலிருந்து வாழ்த்துகின்றோம்..
கலைராணிசோலை
பெருங்குடி

மணிதன்